தூதர் முஹம்மதிற்கு ஆறுதல் சொன்ன பெண்மனி

1இந்த உலகமே போற்றும் தலைவர் அவர். இதுநாள் வரை அடிமைகள் என்றே தங்களை நம்பி வந்த மக்களை நேர்வழிப்படுத்தியவர் அவர்.காட்டரபிகள் என் வர்ணிக்கப்பட்டவர்களை கல்வியில் சிறக்க வைத்தவர் அவர். இவர் உலகில் தோன்றி இருக்காவிட்டால் அரபிகள் இன்றுவரை அடிமைகளாகவே இருந்திருப்பார்கள் என வரலாற்றில் போற்றப்படுபவர் அவர். மேலும் நாளை மறுமையிலே நமக்காக இறைவனிடத்திலே சிபாரிசு செய்யப்போகிறவ்ரும் இவரே. ஆம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

ஆனால் ஹீரா குகையில் ஜிப்ரயீல் என்னும் வானவரை பார்த்து பயந்து வீட்டிற்கு வருகிறார். அங்கே ஒரு பெண் உலகத்திற்கே வழிகாட்ட வந்த முஹம்மதிற்கு ஆறுதல் சொல்கிறார் அடைக்கலமாகவும் இருக்கிறார்.

முஹம்மதே நீங்கள் இந்த மக்களுக்கு நல்லதே நாடி இருக்கிறீர்கள். நிச்சயம் உங்களை சைத்தான் சந்திக்க வரமாட்டான். அது இறைவனின் செயலாகத்தான் இருக்கும் என தைரியமூட்டி ஆறுதல் சொல்கிறார்.மேலும் இது சம்பந்தமாக யூத அறிஞரை சந்தித்து விளக்கம் பெற்று முஹம்மதை தெளிவு படுத்தி அவர்களை இறைவனின் தூதுவர் எனவும் ஏற்கிறார்.

அந்த பெண் வேறுயாருமல்ல முஹம்மது (ஸல்) அவர்களின் மிகப்பிரியமான மனைவி கதீஜா (ரலி) அவர்கள்.

செல்வச் சீமாட்டியான அவர் முஹம்மது (ஸல்)அவர்களுக்காக செல்வத்தை துறக்கிறார். மேலும் மக்காவாசிகள் அவரை ஒன்றும் செய்துவிட முடியாதவாறு அரணாக இருக்கிறார்.

அவர் இறந்த பிறகு வேறு வழியில்லாமல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவைவிட்டே வெளியேர நேர்கிறது.

மற்றொருநாள் மதீனாவில் அரசராக முஹம்மது நபி (ஸல்) போர்களத்திலே கிடைத்த முத்து மாலையை பார்த்து அழுகிறார்கள். ஏன் என்று வினவ பதில் வருகிறது “இது கதீஜா (ரலி) அவர்கள் அணிந்திருந்த முத்து மாலை”.

நான் சிரமப்பட்ட போதெல்லாம் எனக்கு உதவியாய் இருந்து மக்கா நகர மக்கள் என்னை எதுவும் செய்துவிட முடியாதவாறு பார்த்துக்கொண்ட அன்பு மனைவி இன்று நான் அரசனாக வீற்றிருக்கும் பொழுது அருகில் இல்லையே என்கிர ஏக்கம் அழ வைத்துவிடுகிறது.

– முஹம்மது சிராஜுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *