மம்மி

webjazba-61

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இவ்வுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆகையால் அரசர்களின் சடலங்கள் பாதுகாக்கப்பட்டன.

உடலிலிருந்து நுரையீரல் (Lungs), கல்லீரல் (Liver), குடல் மற்றும் மூளை ஆகியவற்றை உடம்பிலிருந்து நீக்கிவிடுவார்கள். காரணம் இவை உடலினுள் இருந்தால் மொத்த உடலையும் கெட்டுப்போக செய்துவிடும். இதில் ஆச்சரியமான விஷயம் இதயத்தை மட்டும் அப்படியே விட்டுவிடுவார்கள். ஏனெனில் உடலின் மொத்த இயக்கம், சிந்தனை, ஞாபகம் போன்றவை இதயத்தை சார்ந்தது என்று அவர்கள் நம்பி வந்தனர்.

Untitledஇவையெல்லாம் இதயத்தின் செயல் அல்ல மூளையின் செயல் தான் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. வெளியே எடுத்த இந்த உறுப்புகளை எல்லாம் (மூளையை தவிர) பத்திரமாக ஒரு ஜாடியில் போட்டு மூடி வைத்துவிடுவார்கள். இதன் பிறகு உடலை, வேதிபொருளான நேட்ரான் (NATRON) எனும் உப்பை தடவி நாற்பது நாட்கள் நன்றாக உலறவைத்துவிடுவார்கள்.

இதன் மூலம் உடல் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். நாற்பது நாட்களுக்கு பின் உடல் உலர்ந்த திராட்சை போல சுருங்கிவிடும், பிறகு எண்ணையில் நனைத்த துணியால் உடம்பினுள் வைத்து திணிக்கப்படும் (சோளக்காட்டு பொம்மையில வைக்கோல் வைப்போமே அப்படி). பின் நீளமான துணியால் உடலை நன்றாக சுற்றி வைத்துவிடுவார்கள். இதன்பின் உடலை சவப்பெட்டியில் வைத்து மன்னரின் முகம் பதித்த கவசத்தினால் உடல் மூடப்பட்டுவிடும்.

1886 ஜுன் மாதம் எகிப்தில் இடம்பெற்றுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இத்தகைய மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால் அந்த உடல் மேலே சொல்லப்பட்ட எந்த பதப்படுத்துதல் முறையும் பின் பற்றப்படாமல் (குடல் ஈரல் இதயம் மூளை வெளியே எடுக்காமல் ) உள்ளது உள்ளபடியே இருந்தது. அது Ramesses II என்ற அரசனான ஃபிர்அவ்னின்  உடல்.

1981-ல் ஃபிரான்ஸிஸ் மித்ரான் ஃபிரான்ஸ் நாட்டின் அதிபரானபோது, உலகின் மிகக்கொடிய கொடுங்கோல் அரசன் என்று கூறப்பட்ட‌ ஃபிர்அவ்னின் சடலத்தை பகுப்பாய்வு செய்வதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார்.

அந்த உடல் ஆய்வுக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விஞ்ஞானி மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) தலைமையில் பல்வேறு தொல்லியல் மற்றும் உடற்கூறியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் என ஆரய்ச்சிக்குத் தேவையானவர்கள் அனைவரும் ஆய்வகத்திலே குழுமி, ஃபிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெளியிடப்பட்ட விஞ்ஞானிகளின் அறிக்கையில் ‘உடலில் உப்பு படிந்திருப்பதானது, ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் ஃபிர்அவ்ன் உயிர் பிரிந்தவுடன் உடல் மட்டும் ஏதோ ஒரு புதிய முறையில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் வெளியிட்டனர்.

கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் (அதே போன்று கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட) மற்ற உடல்களைவிட இந்த உடல் மட்டும் பழுதடையாமல், எந்த பாதிப்புக்களும் ஏற்படாமல், எவ்வித சிதைவுமில்லாமல் இத்தனை காலம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).

– அல்குர்ஆன் (10:90,91,92)

ஃபிர்அவ்னின் இந்த உடல் எகிப்து அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்திய மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) இதன் காரணமாக இஸ்லாத்தையும் ஏற்றார்.

மேலும் அவர் தனது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நான் எகிப்தின் அருங்காட்சியகத்தில் மம்மிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அங்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ‘ஆஹா… என்ன ஒரு விந்தை இது! காலத்தை கடந்த மனிதர்களை காண்பது எப்படி ஒரு பிரமிப்பை தருகிறது..’ என்று விழிகள் விரிய முனுமுனுத்தபடி நகர்ந்து சென்றனர்.

என்னே ஒரு துரதிஷ்டம்..! பாடம் செய்யப்பட்ட அந்த உடல் பறைசாற்றும் பாடத்தை, இறைவனையும் அவன் தூதரையும் நிராகரிப்பவர்களுக்கு உறைந்த சாட்சியாய், அத்தாட்சியாய் அந்த உடலை நூற்றாண்டுகளாய் இறைவன் பாதுகாப்பதை அறியாதவர்களாய்……!”

– முஹம்மது சிராஜுத்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *