பிடரி நரம்பு

1ஒரு சம்பவம் நிகழாமலே வல்ல இறைவனால் உங்களுக்கு துன்பத்தை கொடுக்க இயலும். உங்கள் கை உடைந்து விட்டது வலி. ஆனால் இறைவன் நாடினால் கை உடைந்தால் என்ன வலி ஏற்படுமோ அதே வலியை உங்கள் கையை உடைக்காமலே தர இயலும். இது எப்படி சாத்தியம் ?

நீங்கள் உறங்கும்போது கனவு காணுகிறீர்கள். கனவில் உங்களை பாம்பு தீண்டிவிட்டது. நிஜத்தில் பாம்பு தீண்டினால் என்ன வலி ஏற்படுமோ அதே வலியை அனுபவிப்பீர்கள். கனவு கலைந்து உறக்கத்திலிருந்து எழும்வரை இது நீடிக்கும். விழிப்படைந்த பின் கனவுதானா என உங்கள் மனதை தேற்றிக்கொள்விர்கள்.

உண்மையில் என்ன தான் நடக்கிறது. நீங்கள் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த உங்களது மூளை வேலை செய்யத்துவங்குகிறது. அது அட்ரினல் சுரப்பியை வெளியிட்டு பிடரி நரம்பு மூலமாக அதை மற்ற பாகங்களுக்கு செலுத்தி இதயத்துடிப்பை அதிகரித்து உங்களது உறக்கத்தை கலைக்கிறது. உங்கள் மூளை இந்த செயலை செய்யத் தவறினால் அல்லது உங்கள் பிடரி நரம்பு அறுபட்டிருந்தால் உங்கள் நிலை ?

இப்பொழுது பின்வரும் இறைவசனத்தை பாருங்கள்.

(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.

– அல்குர்ஆன் (8:12)

– முஹம்மது சிராஜுத்தீன்

மம்மி

webjazba-61

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இவ்வுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆகையால் அரசர்களின் சடலங்கள் பாதுகாக்கப்பட்டன.

உடலிலிருந்து நுரையீரல் (Lungs), கல்லீரல் (Liver), குடல் மற்றும் மூளை ஆகியவற்றை உடம்பிலிருந்து நீக்கிவிடுவார்கள். காரணம் இவை உடலினுள் இருந்தால் மொத்த உடலையும் கெட்டுப்போக செய்துவிடும். இதில் ஆச்சரியமான விஷயம் இதயத்தை மட்டும் அப்படியே விட்டுவிடுவார்கள். ஏனெனில் உடலின் மொத்த இயக்கம், சிந்தனை, ஞாபகம் போன்றவை இதயத்தை சார்ந்தது என்று அவர்கள் நம்பி வந்தனர்.

Untitledஇவையெல்லாம் இதயத்தின் செயல் அல்ல மூளையின் செயல் தான் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. வெளியே எடுத்த இந்த உறுப்புகளை எல்லாம் (மூளையை தவிர) பத்திரமாக ஒரு ஜாடியில் போட்டு மூடி வைத்துவிடுவார்கள். இதன் பிறகு உடலை, வேதிபொருளான நேட்ரான் (NATRON) எனும் உப்பை தடவி நாற்பது நாட்கள் நன்றாக உலறவைத்துவிடுவார்கள்.

இதன் மூலம் உடல் பாக்டீரியாக்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். நாற்பது நாட்களுக்கு பின் உடல் உலர்ந்த திராட்சை போல சுருங்கிவிடும், பிறகு எண்ணையில் நனைத்த துணியால் உடம்பினுள் வைத்து திணிக்கப்படும் (சோளக்காட்டு பொம்மையில வைக்கோல் வைப்போமே அப்படி). பின் நீளமான துணியால் உடலை நன்றாக சுற்றி வைத்துவிடுவார்கள். இதன்பின் உடலை சவப்பெட்டியில் வைத்து மன்னரின் முகம் பதித்த கவசத்தினால் உடல் மூடப்பட்டுவிடும்.

1886 ஜுன் மாதம் எகிப்தில் இடம்பெற்றுள்ள ஒரு பள்ளத்தாக்கில் இத்தகைய மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.  ஆனால் அந்த உடல் மேலே சொல்லப்பட்ட எந்த பதப்படுத்துதல் முறையும் பின் பற்றப்படாமல் (குடல் ஈரல் இதயம் மூளை வெளியே எடுக்காமல் ) உள்ளது உள்ளபடியே இருந்தது. அது Ramesses II என்ற அரசனான ஃபிர்அவ்னின்  உடல்.

1981-ல் ஃபிரான்ஸிஸ் மித்ரான் ஃபிரான்ஸ் நாட்டின் அதிபரானபோது, உலகின் மிகக்கொடிய கொடுங்கோல் அரசன் என்று கூறப்பட்ட‌ ஃபிர்அவ்னின் சடலத்தை பகுப்பாய்வு செய்வதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு எகிப்திய அரசாங்கத்திடம் வேண்டிக்கொண்டார்.

அந்த உடல் ஆய்வுக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விஞ்ஞானி மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) தலைமையில் பல்வேறு தொல்லியல் மற்றும் உடற்கூறியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. தொல்பொருள் ஆய்வாளர்கள், சத்திர சிகிச்சை நிபுணர்கள் என ஆரய்ச்சிக்குத் தேவையானவர்கள் அனைவரும் ஆய்வகத்திலே குழுமி, ஃபிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெளியிடப்பட்ட விஞ்ஞானிகளின் அறிக்கையில் ‘உடலில் உப்பு படிந்திருப்பதானது, ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் ஃபிர்அவ்ன் உயிர் பிரிந்தவுடன் உடல் மட்டும் ஏதோ ஒரு புதிய முறையில் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றும் வெளியிட்டனர்.

கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் (அதே போன்று கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட) மற்ற உடல்களைவிட இந்த உடல் மட்டும் பழுதடையாமல், எந்த பாதிப்புக்களும் ஏற்படாமல், எவ்வித சிதைவுமில்லாமல் இத்தனை காலம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).

– அல்குர்ஆன் (10:90,91,92)

ஃபிர்அவ்னின் இந்த உடல் எகிப்து அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்திய மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille) இதன் காரணமாக இஸ்லாத்தையும் ஏற்றார்.

மேலும் அவர் தனது புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“நான் எகிப்தின் அருங்காட்சியகத்தில் மம்மிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். அங்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ‘ஆஹா… என்ன ஒரு விந்தை இது! காலத்தை கடந்த மனிதர்களை காண்பது எப்படி ஒரு பிரமிப்பை தருகிறது..’ என்று விழிகள் விரிய முனுமுனுத்தபடி நகர்ந்து சென்றனர்.

என்னே ஒரு துரதிஷ்டம்..! பாடம் செய்யப்பட்ட அந்த உடல் பறைசாற்றும் பாடத்தை, இறைவனையும் அவன் தூதரையும் நிராகரிப்பவர்களுக்கு உறைந்த சாட்சியாய், அத்தாட்சியாய் அந்த உடலை நூற்றாண்டுகளாய் இறைவன் பாதுகாப்பதை அறியாதவர்களாய்……!”

– முஹம்மது சிராஜுத்தீன்

விண்கற்கள்

saritharam-kaddum-pugaipadangal_html_ef505c72பூமியை நோக்கி தினமும் விண்கற்கள் (Meteorite) விழுந்துகொண்டே இருக்கின்றன. அவை பூமியின் வளிமண்டலத்தைக் கடக்கும்போது எரிந்து சாம்பலாகி விடுகின்றன. மிகப் பெரிய விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது எரிந்தது போக மீதி பூமியைத் தாக்கி மிகப் பெரிய பள்ளங்களை (Crater) ஏற்படுத்தியுள்ளன. அவற்றில் மிகப் பெரிய மற்றும் மிகவும் பழமையான ஒரு பெரிய பள்ளத்தை ஆடம் கிரேட் (Grade) என்பவரின் தலைமையிலான குழு 2009 ஆம் ஆண்டு கண்டுபிடித்தது.

டென்மார்க் அருகே உள்ள கிரீன்லாந்து நாட்டில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது 100 கி.மீ. விட்டம் கொண்டது. சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின்மீது தாக்கிய விண்கல் மூலம் இந்தப் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது என அங்கு கிடைத்த விண்கல் மாதிரிகளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர்.


இந்தப் பள்ளம் 100 கி.மீ. நீளமும், 7,857 சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. ஆனால் விண்கல் விழுந்தபோது 500 கி.மீ. கொண்ட பள்ளமாக இருந்துள்ளது. மழை, பனி, காற்று, மண் அரிப்பு போன்ற பல்வேறு இயற்கை காரணங்களால் இப்பள்ளம் மூடப்பட்டு, சிறியதாக சுருங்கி உள்ளது. இது பூமியின் தரையிலிருந்து 25 கி.மீ. ஆழத்தில் உள்ளது. இந்த பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல் சுமார் 30 கி.மீ. அகலம் கொண்டதாக இருந்திருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது இது விழுந்திருந்தால் பூமியில் வாழும் உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பூமியின்மீது விழுந்த விண்கற்களிலேயே மிகப் பெரிய விண்கல் ஒன்று 1920ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நமீபியா நாட்டில் ஹோபா என்னும் விவசாயப் பண்ணையில் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு ஹோபா விண்கல் (Hoba Meterorite) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விண்கல் 3 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும், சுமார் ஒன்றரை மீட்டர் தடிமனும் கொண்டது. இதன் எடை 60 டன், இந்த விண்கல் சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தட்டை வடிவத்தில் இருந்ததால் குறைவான வேகத்தில் பூமியின் மீது விழுந்துள்ளது. அதனால் பெரிய பள்ளம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விண்கல்லில் இரும்புத்தாதுகள் 82.4 சதவீதமும், நிக்கல் 16.4 சதவீதமும், கோபால்ட், பாஸ்பரஸ், செம்பு, துத்த நாகம், கார்பன், சல்பர், குரோமியம், இரிடியம், ஜெர்மனியம் போன்ற மூலகங்களும் சிறிதளவில் உள்ளன.

மேலும் பின்வரும் இறைவசனம் வின்கற்கள் பூமியில் விழுவதை உறுதிபடுத்துகின்றன.

இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.  

– அல்குர்ஆன் (7:84)

இந்த வின்கற்கள் இப்பொழுது பூமியில் ஏன் விழுவதில்லை ?

தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.

– அல்குர்ஆன் (22:65)

– முஹம்மது சிராஜுத்தீன்